பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
03:06
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை என்னும் கிருஷ்ண தலம் விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், ÷க்ஷத்திரம், நதி, நகரம், என்னும் எழு லட்சணங்களால் சிறப்புப் பெற்ற தலமானதால், சப்த புண்ணிய தலம் என்று அழைக்கப்படுகிறது. கண்ணமங்கையில் இருக்கும் தெய்வத்தை பத்தராவிப் பெருமாள் என்பர். பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார். பக்தர்கள் மீது குழந்தைபோல அன்பு காட்டுவதால் பக்தவத்சலன் என்றும் பெயர் உண்டு. இங்கு தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேனீக்களாக உருவெடுத்து கண்ணனை அனுதினமும் கண்டு மகிழ்கிறார்கள் என்பது வரலாறு. தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது. அத்தேனீக்கள் யாரையும் ஒன்றும் செய்வதில்லை. முறையாக ஓம் நமோ நாராயணாய நம என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிப்பவர்கள் சோட்சம் பெறுவர் என்பது ஐதீகம். ஆனால், மந்திரசித்தி பெறாதவர்கள் கூட ஓரிரவில் இத்திருத்தலத்தில் தங்கி, பக்தியுடன் அவனையே நினைத்து, வேறெடுத்த சிந்தனையும் இல்லாமல் இருந்தால், மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது.