துவாரகையில் ஆட்சி செய்யும் துவாரகாநாதனை சிறு வயதிலிருந்தே பக்தி செய்தவள் பக்திமீரா. இவள் தமிழ்நாட்டின் ஆண்டாள் போல, வடநாட்டில் கிருஷ்ணபக்தியில் தலைசிறந்து திகழ்ந்தாள். ஒருமுறை மீராவின் வீட்டுக்கு வந்த துறவி ஒருவரிடம் இருந்த கிருஷ்ண விக்ரஹத்தை பெற்ற மீரா. தன் வாழ்நாளின் இறுதிவரை பூஜித்து வந்தாள். அக்கிருஷ்ணனை வழிபாடு செய்யாமல் மீரா உணவருந்தியதில்லை. அன்று முதல் தன் உடல், உயிர், உணர்வு என்று எல்லாமே கிருஷ்ணபக்திக்காக என்றாகி விட்டாள். சிறுவயதுமுதலே கிருஷ்ணபக்திப் பாடல்களைத் தானாகவே புனைவாள். அதை இசைப்பாடலாக கானம் செய்வாள். அவளது பாடல்கள் கல்மனத்தையும் கரைப்பதாக இருந்தது. மணப்பருவம் எய்திய மீரா மீண்டும் பக்தியில் தன்னை இணைத்துக் கொண்டாள். இதனால், வஞ்சகர்கள் சிலர் மீராவுக்கு கிருஷ்ணனின் பிரசாதம் என்று சொல்லி விஷப்பாலைக் கொடுத்தனர். அப்போது துவாரகை கண்ணன் சன்னதி தானே மூடிக்கொண்டது. மேவாரிலிருந்து சுடுமணலில் பித்துப்பிடித்தவள் போல நடந்து மீரா, சன்னதியை அடைந்தவுடன் கோயில் கதவுகள் தானே திறந்து கொண்டன. அவள் தன் இனிமையான குரலில் கானம் பாடி துவாரகை நாதன் கிருஷ்ணனோடு இரண்டறக் கலந்தாள்.