பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2015 03:01
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வேங்கட வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் மோகன அவதார சேவையில் சுவாமி அருள் பாலித்தார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூ சேவை நடந்தது. தொடர்ந்து 5:00 மணிக்கு தனுர்மாத ஆராதனை சாற்றுமுறை நடந்தது. அதிகாலை 5:30 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ஒன்றிய சேர்மன் இளங்கோவன், கோவில் நிர்வாக தர்மகர்த்தா முரளி செய்திருந்தனர். விழுப்புரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.
அதிகாலை 5:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பும், 6:00 மணிக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை தொழிலதிபர் குபேரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள பாலமுருகன் கோவி லில் வைகுண்ட ஏகாதசி, கிருத்திகை மற்றும் வருட பிறப்பு உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை மோகன் அய்யர் செய்தார்.