விழுப்புரம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி பானாம்பட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. பானாம்பட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தனுர்மாத ஆராதனை சாற்றுமுறை நடந்தது. தொடர்ந்து 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளினார். சுவாமி வீதியுலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.