பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
காரிமங்கலம்: காரிமங்கலம், அக்ரஹாரம் ஸ்ரீலட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், லட்சுமி நாராயண ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்தனர். பக்தர்களுக்கு எம்.எல்.ஏ., அன்பழகன் பிரசாதம் வழங்கினார். அதிகாலை மழை பெய்த போதும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.
பிக்கனஹள்ளி, மலைமேல் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவில், மோதூர் பெருமாள் கோவில், காவேரிப்பட்டணம் பிரசன்னவெங்கட் ரமண ஸ்வாமி கோவில்களில், காலை, 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை வழிபட்டனர்.