கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி, ராசுவீதியில் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழா,நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, துவங்கியது. பக்தர்கள் நள்ளிரவு முதலே கோவிலில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதே போல் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில், கட்டிகானப்பள்ளி பொன்மலை பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.