சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், கடந்த சில நாட்களாக, பல்வேறு பகுதியில் இருந்து மேலமருவத்தூர் கோவிலுக்கு செல்லும், மாலை அணிந்து, சிகப்பு உடை அணிந்து வரும் ஓம் சக்தி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்களுக்கிடையே, மிகவும் பிரசித்த பெற்ற இக்கோவிலில், விஷேச நாட்களை உட்பட எப்போதும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த மாதம், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. மாலை அணிந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பண்ணாரி மாரியம்மனை தரிசித்து சென்றனர். குறிப்பாக பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.