பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதி கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. காட்டுவனஞ்சூர் ராம ஆஞ்ச நேயர் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பூட்டை மாரியம்மன் கோவில், தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில், அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில், சங்கராபுரம் கடைவீதி அரசடி விநாயகர் கோவில், பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில், தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சங்கராபுரம் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தலைவர் சாப்ஜான் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், முத்துகருப்பன், சவுந்தர், மூர்த்தி, வெங்கடேசன், அருணாசலம், செந்தில், குணசேகரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். கேக் வெட்டப்பட்டது. பொருளாளர் சுதாகரன் நன்றி கூறினார்.