சின்னசேலம்: சின்னசேலம் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் புத்தாண்டு மற்றும் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னசேலம் அருகே கல்லாநத்தத்தில் அடிபெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்தனர். கருந்தலாக்குறிச்சி பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்காரம் செய்து சுவாமி ஊர்வலம் நடந்தது.