விருதுநகர் : விருதுநகர் மீசலூர் ஷீரடி சாய்பாபா, ஸ்ரீ சத்யநாராயணா விரத பூஜை, 108 புனித கலசங்களுடன் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் இருந்து 51 பால் குடங்களை பக்தர்கள் சுமந்து நடை பயணமாக சாய்பாபா கோயிலுக்கு வந்து அபிஷேகம் செய்தனர். திருச்சி விடியல் பார்வையிழந்தோர் இன்னிசை குழுவினரின் ஷீரடி சாய்பாபா பக்தி பாடல்கள் பாடப்பட்டன. கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப் பட்டது. 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.