புதுச்சேரி: முதலியார்பேட்டை முத்துக்குமாரசுவாமி கோவி லில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது.
முதலியார்பேட்டை வெள்ளாழ வீதியில் முத்து விநாயகர், வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று ஆருத்ரா (திருவாதிரை) தரிசன விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவையொட்டி, காலை 8.00 மணிக்கு முத்து விநாயகர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. 9.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9.30 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் திருக்கல்யாண வைபோகம், 10.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 10.15 மணிக்கு கோபுர தரிசனமும், ஆருத்ரா (திருவாதிரை) தரிசனமும் நடந்தது. பின், சுவாமி திருத்தேர் வீதியுலா நடந்தது. விழாவிற்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ஆராவமுது, வி.சி.சி. நாகராஜன் மற்றும் கோவில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.