ஆனைமலை : ஆனைமலை சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில் மீண்டும் கிரிவலம் துவங்குவதாக கிரிவல பக்தர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலையின் மேற்குப்பகுதியிலுள்ள சேனைக்கல்ராயன் குன்றின் மீது ஆயிரத்து 500 அடி உயரத்தில், பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் மாலை 4.30 மணிக்கு, பெருமாளுக்கு யாகம் வளர்க்கப்பட்டு, 5.00 மணிக்கு கிரிவலம் துவங்கும்.கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதையடுத்து பக்தர்களின் நலன் கருதி வைகுண்ட ஏகாதசியன்று கிரிவலம் செல்ல கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிரிவல பக்தர்கள் குழுவினர் தடை விதித்தனர்.சிறுத்தை பிடிப்பட்டதையடுத்து கிரிவலம் செல்ல தடை விலக்கி கொள்ளப்பட்டு நேற்று முதல் கிரிவலம் மீண்டும் துவங்கியுள்ளதாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.