வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் பெருமாள் கோவில் தேர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2015 11:01
அவலூர்பேட்டை: கெங்கபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திருத்தேர்வெள் ளோட் டத் திற்குதயார் நிலையில் உள்ளது.
மேல்மலையனூர் ஒன்றியம் கெங்கபுரம் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் தொண்டைநாட்டு வைணவத் தலங்களில் சிறப்புடையது. கெங்கபுரம் பல்லவர் காலத்துதொடர்புடையஊர்.இந்த கோவிலில் மரத்தினாலான, திருத்தேர்செய்யும் பணிகடந்த 2013ம் ஆண்டு சிறப்பு பூஜையுடன் துவங்கியது.
மரத்தேரில் பெருமாளின் தசாவதார சிற்பங்கள், சுந்தரகாண்டசிற்பங்கள் அழகாக செதுக்கி,வடிவமைத்துள்ளனர்.திருத்தேர் பணிகள்முடிவடைந்த நிலையில்,சில தினங்களுக்கு முன்னர் 10டன்எடைகொண்டநான்கு இரும்பு சக்கரங்கள் மற்றும் இரும்பு சட்டங் களை திருச்சியிலிருந்து கொண்டு வந்தனர்.மரத்தேரை கிரேன்மூலம் எடுத்து இரும்பு சக்கரங்களின் பீடத்தின் மீதுஇணைத்து திருத்தேர்பணிகளை நிறைவு செய்தனர்.
தற்போது கோவிலின்எதிரில் பணிகள் முடிவடைந்த நிலையில் பிரம்மாண்டமாக திருத்தேர்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.விரைவில் திருத்தேர்வெள்ளோட்டம் விடுவதற்காக கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமமக்கள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.