பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன வழிபாடு இன்று (5ம் தேதி) நடக்கிறது.
பாகூரில் ௧400 ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன வழிபாடு இன்று (5ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4.00 மணிக்கு, விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 5.00 மணிக்கு கலச ஸ்தாபனம் சிறப்பு ஹோமம், 9.00 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத மாணிக்க நடராஜர் பெருமானுக்கு, ஆருத்ரா தரிசன வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.