பதிவு செய்த நாள்
05
ஜன
2015
12:01
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று நடந்தது.
கோவிலிலுள்ள கருணாம்பிகை அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின், கிளி வாகனத்தில் திருவாதிரை அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், குலாலர், விஸ்வகர்ம, பார்வதி, கோ வம்சத்தார், கருணாம்பிகை, கொங்கு கலையரங்கம் ஆகிய திருமண மண்டபங்களில், சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. பெண்கள், சுவாமி தரிசனத்துக்கு பின், விரதத்தை முடித்துக் கொண்டனர். பார்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருவிழாவில், 52 பெண்களுக்கு சுமங்கலி பூஜை, சிறுமியருக்கு வடு பூஜை செய்யப்பட்டது. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. கருணாம்பிகை திருமண மண்டபத்தில் சந்திரசேகரர், அம்மைக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடத்தப்பட்டன.