புதுச்சேரி: சின்மய சூரியன் கோவிலில், நொச்சூர் வெங்கட்ராமனின் உபன்யாசம் நடந்தது.
புதுச்சேரி கிருஷ்ணா நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சின்மய சூரியன் கோவிலில் நேற்று ஈஸ்வர கிருபையை முன்னிட்டு, உபன்யாச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நொச்சூர் வெங்கட்ராமன் பங்கேற்று, பகவான் ரமணர் அருளிய உள்ளது நாற்பது என்பதிலிருந்து தன்னை அறிதல் என்ற தலைப்பில் உபன்யாசம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழு ஜெயராமன் செய்திருந்தார்.