நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை நடை திறந்தது, வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வைரகிரீடம், வைரமூக்குத்தி அணிவிக்கப்பட்டு அலங்காரத்துடன் தேவி காட்சி தந்தார். மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் 6.45 மணிக்கு கொலு மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் அம்மனுக்கு தாலாட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.