சுசீந்திரம் கோயிலில் சப்தாவர்ணம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2015 12:01
நாகர்கோவில் : சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையிலும்,. மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான நான்காம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் மூன்று தேர்கள் வலம் வந்தது. பத்தாம் நாள் விழாவில் அதிகாலை ஒரு மணிக்க சப்தாவர்ணம் நடைபெற்றது. ரிஷப் வாகனத்தில் தாணுமாலைய சுவாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகியும், கருட வாகனத்தில் பெருமாளும் வலம் வந்தனர். கோயில் முன் வந்ததும். மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, ஏழகரம் விநாயகர், வேளிமலை குமாரசாமியும், சுவாமியை வலம் வந்து நின்றனர். தொடர்ந்து தாணுமாலைய சுவாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து பிள்ளைகளை பிரிய மனம் இல்லாமல் முன்னும் பின்னுமாக வந்தார். பின்னர் வேகமாக கோயிலுக்கு சென்றதும், அறம்வளர்த்த நாயகியும் கோயிலுக்கு சென்றார். பின்னர் முருகனும், கணபதியும் பிரியா விடை பெற்று சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.