தூணைத் தழுவி பெருமாளை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா! இதுபற்றி தெரிய வாருங்கள் கும்பகோணம் அருகிலுள்ள ஆதனுõர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலுக்கு! திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருப்பணி செய்தபோது, அவரால் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை. தனக்கு உதவும்படி பெருமாளிடம் வேண்டவே சுவாமி, கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வரும்படி கூறினார். ஆழ்வாரும் அங்கு சென்றார். அங்கு தலைப்பாகை அணிந்த வணிகர் ஒருவர், நெல் அளக்கும் மரக்கால், ஏடு எழுத்தாணியுடன் வந்தார். திருமங்கையிடம், உங்களுக்கு உதவ ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்னிடம் உள்ள மரக்கால் கேட்டதை தரக்கூடியது. இதில் மணலை அளந்து தருகிறேன். பணியாளர்களின் உழைப்பிற்கேற்ப மணல் ஊதியமாக மாறிவிடும், என்றார். ஆழ்வாரும் ஒப்புக்கொண்டார். ஆனால், கூலி பெற்ற பணியாளர்கள் பலருக்கு மணல் அப்படியே இருந்தது. இதனால் கோபம்கொண்ட அவர்கள் வணிகரை அடிக்கப் பாய்ந்தனர். வணிகர் தப்பி ஓட, திருமங்கை பின் தொடர்ந்தார். ஓரிடத்தில் வணிகர் நின்றார். நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்? என்று அவரிடம் கேட்டார். வந்தவர் மகாவிஷ்ணுவாக ரூபம் காட்டினார். கூலி அளந்ததால் இவர் ஆண்டளக்கும் ஐயன் என்று பெயர் பெற்றார்.
திருமணத்துக்கு துõண் வழிபாடு: சுவாமி சந்நிதி முன் இரண்டு துõண்கள் உள்ளன. பெருமாள் கோயில்களில் முதலில் சுவாமியின் திருப்பாதத்தையும், பின் திருமுகத்தையும் வணங்க வேண்டும். இதனடிப்படையில் நீண்ட நாட்களாக திருமணத்தடை உள்ளவர்கள், திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஒரு துõணை தழுவிக்கொண்டு சுவாமியின் திருப்பாதத்தையும், மற்றொரு துõணை தழுவி சுவாமியின் திருமுகத்தையும் தரிசிக்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என நம்புகிறார்கள். இதற்கு, மணத்துõண் என்று பெயர்.