Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேசியமும் தெய்வீகமும்! இடது திருவடி தரிசனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புத்தியிருக்கணும் கத்தி முனையாட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
01:01

வாழ்வில் விரும்பியதை அடையும் தகுதியும், வல்லமையும் உங்களுக்கு இருக்கிறது. நான் சர்வ சக்தி படைத்தவன்; சர்வ ஞானம் படைத்தவன் என்ற வார்த்தைகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் தனித்தன்மையை இழக்காமல், அதன் போக்கில் நின்று வெற்றியாளர்களாக வளர வேண்டும். அதுவே என் விருப்பம்.தீப்பொறியாக எழுந்து நில்லுங்கள். நல்லெண்ணத்தைஎங்கும் பரப்புங்கள். அனைவரும் ஒற்றுமையுடன் கலந்து பழகுங்கள். உலகில் அரிய பெரிய செயல்கள் செய்யவே நீங்கள்  பிறந்திருக்கிறீர்கள். கமலர்ச்சியுடன் பணியில்  ஈடுபடுங்கள். கடவுளின் அருளால் எல்லாம் நலமாகவே நடக்கும். எந்தச் செயலுக்கும் உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள். அறிவுக்கூர்மையுடன் செயல்படுத்துங்கள். புத்திக்கூர்மையே உங்களின் பெரும் சொத்து.அகந்தையை அகற்றி விட்டு, குழந்தை போல கள்ளம் கபடம் அற்ற மனநிலையில் இருங்கள். இனிமையும், புன்னகையும் இதழில் நிறைந்திருக்கட்டும்.பூமிதேவியைப் போல பொறுமையுடன் இருங்கள். நீங்கள் பொறுமையைக் கைகொண்டால் உலகமே உங்களின் காலடியில் கிடக்கும்.உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழைத்தனமும், கபடசிந்தனையும் நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிடும்.உழையுங்கள். இரும்பு போன்ற தசைகளும், உருக்கு போன்ற நரம்புகளும், உறுதியான மனமுமே நமக்கு இன்றைய தேவை.எண்ணத்தில் துõய்மை, தெளிந்த அறிவு, கொள்கையில் உறுதி கொண்டவர்களாக இருங்கள். உற்சாகமுடன் உழைத்து தடைகளைக் கடந்து வெற்றி முழக்கம் எழுப்புங்கள்.சுயநலம் இல்லாமல் வாழ்வதே நல்லொழுக்கம். எனவே, எந்த நிலையிலும் சுயநலத்தை மறக்கப் பழகுங்கள்.எதிலும் பரபரப்புடன் ஈடுபட வேண்டாம். ஆனால், சுறுசுறுப்பை ஒருபோதும் கைவிடாதீர்கள். பிறருக்காக சிறு நன்மையை மனதில் நினைத்தால் கூட சிங்கத்தின் பலம் உங்களுக்கு வந்து விடும். கொடுத்து மகிழுங்கள். நீங்கள் கொடுத்ததை விட ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களையே வந்தடையும்.வாங்குவதற்காக யாரிடமும் கை நீட்ட வேண்டாம். பிறருக்கு உதவும் தர்மத்தை விட பெரிய நன்மை உலகில் வேறில்லை.வாழ்வில் பெரிய சாதனை நிகழ்த்தப் பிறந்தவர் நீங்கள் என்பதை முழுமையாக நம்புங்கள். யாரைக் கண்டும் அஞ்சாமல் நிமிர்ந்து நின்று பணியாற்றுங்கள்.உண்மை, பொய்யோடு ஒருநாளும் சேராது. உலகமே எதிர்த்து நின்றாலும், இறுதியில் உண்மை ஒருநாள் வென்றே தீரும். கீழ்ப்படியும் குணம் கொண்டவனே கட்டளையிடவும் தகுதி பெறுகிறான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.உலகிற்கு நன்மை செய்வது ஒன்றே உங்களின் குறிக்கோளாக இருக்கட்டும். பெயர், புகழைத் தேடி மட்டுமே அலைய வேண்டாம்.இடையறாமல் வேலையில் ஈடுபடுங்கள். ஆனால், ஒருபோதும் அடிமைத்தனத்துடன் பணியாற்ற வேண்டாம். (மகான் விவேகானந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar