சிவபக்தரானமார்க்கண்டேயருக்கு,16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டசிவனின் இடது கால்,எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால்,எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது. நடராஜரின்இடது திருவடியை தரிசித்தால், நம் பாவங்கள் நீங்கிதீர்க்காயுளுடன் வாழலாம். வாழ்வுக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும்.