Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து! இன்று போல என்றும் வாழ்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குங்குமப்பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
02:01

காஞ்சி மகாப்பெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.ஒரு பக்தை தினமும்தரிசனத்திற்கு வருவார்.பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப் பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக் கொள்ளுங்கள், என்றார்.அப்போது பெரியவர் மேனாவில் (பல்லக்கு) உட்கார்ந்திருந்தார். அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஒருஓரமாக வைத்துவிட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை.அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார்.இதனிடையே வெளியே மேளச்சத்தம் கேட்டது. தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம் பண்ணிட்டு வாயேன், என்றார். அந்த அம்மையாரும் வெளியே போய்விட்டார். அவர் வெளியே செல்லவும், ஒரு விவசாயக் குடும்பப் பெண்மணி சுவாமியைத்தரிசிக்க உள்ளே வந்தார். பரம ஏழையான அந்தப் பெண்ணின் இடுப்பில் அவளது குழந்தை. ஆறுமாதம் தான் இருக்கும். அதற்கு ஏகமாய் ஜலதோஷம். மூச்சு விட திணறிக்கொண்டிருந்தது.அந்தப் பெண் பெரியவரிடம், சுவாமி! கொழந்தைக்கு ஜல்ப்பு...மருந்து வாங்கவழியில்லே! சாமி துண்ணுறு(திருநீறு) கொடுக்கணும், என்று கண்களில் நீர்மல்க கேட்டார்.பெரியவர் அவசரஅவசரமாக, முன்பு வந்த பக்தை கொடுத்த குங்குமப்பூ தொன்னையை எடுத்து அவரிடம் கொடுத்தார். இதை வீட்டுக்கு எடுத்துட்டு போ. குழந்தைக்கு இரண்டு, மூணு தடவை பற்றுப்போடு, என்றார். புறப்பட இருந்தவளை தடுத்து, ரோட்டிலே போகும் போது துõசு விழுந்துடும்! மறைச்சு எடுத்துண்டு போ, என்று எச்சரிக்கை வேறு!அவள் சென்றதும், தன் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்தார். அதை சிறிது தண்ணீர் விட்டு பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்று போட்டுக் கொண்டாற்போல இட்டுக் கொண்டார்.  இதற்குள் காமாட்சியைத் தரிசிக்கசென்ற குங்குமப்பூஅம்மையார்திரும்பினார்.பெரியவர்நெற்றில் பற்றுபோட்டிருந்ததுகண்டு, தான் கொடுத்தமருந்தைத் தான்இட்டிருக்கிறார் என்று ஏராளத்துக்கு சந்தோஷப் பட்டார்.மறுநாள் வழக்கம் போல் அந்த அம்மையார் வந்தார்.உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது என்றார். அம்மையாருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.பெரியவர் இங்கே வார்த்தையைக் கவனமாகக் கையாண்டார். உன்குங்குமப்பூவால் என் கபம் குறைந்தது என்று சொல்லவில்லை. அந்த ஏழைக் குழந்தைக்கு கபம் குறைந்துஇருக்கும் இல்லையா! அதைத் தான் அப்படி குறிப்பிட்டார். ஆக, அவர் வைத்த குங்குமம், இரண்டு நெஞ்சங்களில் மகிழ்ச்சியை சங்கமிக்கச் செய்து விட்டது. இதுதான் மகாபெரியவரின்  கருணா கடாட்சம்!

(மகான் காஞ்சி மகாப்பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar