Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குங்குமப்பொட்டின் மங்கலம் நெஞ்சம் ... கதகளி நடத்தினால் பிள்ளை பாக்கியம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இன்று போல என்றும் வாழ்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
02:01

அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. ஆனால் அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வான மனிதர்களின் இயல்பு.தவறு செய்ததற்கான விளைவு இன்றோ அல்லது நாளையோ விளைந்தே தீரும் என்பது இயற்கையின் நியதி.கவலை என்பது உள்ளத்தில் உண்டாகும் கொடிய நோய். வாழ்வில் சிக்கல் நேர்ந்த போதெல்லாம் மனம் கலங்கி திகைப்படைவதே கவலை.திறமையின்மை, அச்சம் இந்த இரண்டும் மனதில் கவலையை பெருக்கும் காரணிகளாக இருக்கின்றன.வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப்போராட்டம். அதை உணர்ந்து விட்டால் எதிர்பார்ப்பும் இருக்காது ஏமாற்றமும் இருக்காது. கவலைப்படுவதால் சிக்கலின் தன்மையைக் கணிக்க முடியாமல் போகும். சிக்கலுக்கு தீர்வு காணும் திறமையும் உண்டாகாது.தீர்க்க முடியாத துன்பம் என்று உலகில் ஒன்று கிடையாது. தீர்க்கும் வழியைத் தெரியாமல் மக்கள் இருக்கிறார்கள். திறக்க முடியாத பூட்டு என்று ஒன்றும் கிடையாது. சரியான சாவியைக் கண்டுபிடிக்காதவர்கள் தான், சிக்கலில் தவிக்கிறார்கள்.எல்லாப் பொருள்களிலும், எல்லா உயிர்களிலும் கடவுளை காண வேண்டும். அந்த அளவிற்கு மனிதன் அறிவிலே உயர்வு பெற வேண்டும்.  அன்பு வேறு இறைநிலை வேறு அல்ல. உண்மையிலேயே மெய்ப்பொருளான கடவுளை உணரும் போது மனதில் கருணை பிறக்கும்.எல்லாப்பேறுகளும் வாழ்வில் உண்டாக வேண்டும் என எண்ணி பிறரை வாழ்கவளமுடன் என்று வாழ்த்துவது உயர்ந்த பலனைத் தரவல்லது. வீட்டில் வளரும் ஒருசெடியைப் பார்த்து கூட வாழ்க வளமுடன் என வாழ்த்தும் போது அதிலுள்ள பலவீனம் நீங்கி நன்கு வளரத் தொடங்கும்.தொடர்ந்து வாழ்த்து அளிக்கும் போது, எப்பேர்ப்பட்ட பகைவனையும் நம் நண்பராக மாற்றி விட முடியும். வாழ்த்தும் போது மனம் நுண்ணிய நிலையில் அமைதியை பெறுகிறது. அதனால் மனத்தெளிவும், வலிமையும் உண்டாகிறது.மனதில் பகையுணர்வை வளர்த்துக் கொண்டு யாரையும் வாழ்த்த முடியாது.உண்மையாக வாழ்த்து அளிக்கும் போது தான், பகைமை எண்ணம் அடியோடு மறையும்.மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிக்கோளுடன் உலகில் பிறந்திருக்கிறார்கள். அறிவை வளர்த்துக் கொண்டு, இறைநிலையோடு ஒன்ற வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம். ஆண், பெண் நட்பு ஒழுக்கத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் கவசமே திருமணம்.குழந்தைகள் முன்னிலையில் தம்பதிகள் சண்டையிடவோ, குறை கூறுவதோ பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக அமையும்.கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிரை விட மேலாக போற்ற வேண்டிய ஒழுக்கம். உடல், மனம், பொருள் ஆகிய மூன்றையும் காக்க வல்லது கற்பே.அன்பு, அருள், இனியமுகம், சாந்தம் மிக்க நல்லவர்களின் உருவப் படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். இதனால் குடும்பத்தில் நல்ல சூழ்நிலை எப்போதும் இருக்கும்.சமுதாயத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருந்தால் மட்டுமே தனிமனிதர்களிடத்திலும் அமைதியும், மகிழ்ச்சியும்உருவாகும். எல்லோரும் அமைதியான எண்ண அலைகளை மட்டுமே பரப்ப வேண்டும்.காலையில் எழுந்ததும்உலகம் முழுவதையும் நினைத்து வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என வாழ்த்திப் பழகுங்கள். இதனால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் நன்மையே உண்டாகும். (மகான் வேதாத்ரி மகரிஷி)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar