திருச்செங்கோட்டில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். கருவறையில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி இருப்பது இங்கு மட்டுமே. திருச்சிலையில் அம்பாள் இருக்கும் பகுதி பாகம்பிரியாள் எனப்படுகிறது. மூலவருக்குப் பாதி வேட்டியும், பாதி புடைவையுமாக நெய்யப்பட்ட ஆடையே அணிவிக்கப்படுகிறது. இச்சிலை நவபாஷாணத்தால் ஆனது என்கிறார்கள். இங்கு இறைவன் திருவடியின் கீழ் வற்றாத சுனை ஒன்று பாய்கிறது. இது தேவதீர்த்தம் என்று பிரசாதமாக பக்தர்களுக்குத் தரப்படுகிறது.