திருச்செங்கோட்டில் உள்ளது ஓங்காளியம்மன் திருக்கோயில். இங்கு அம்பாள் சிறுமி வடிவில் அருள்பாலிக்கிறாள். பக்தர்கள் இங்கு 60 அடி நீளமுள்ள குண்டம் முன்பு குங்குமம் வைத்து வழிபடுகிறார்கள். மாசி மாதத்தில் 16 நாட்கள் இங்கு குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அரசும் வேம்பும் இணைந்த மரத்தினடியில் நாக உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதால், இவளை வணங்கினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.