கொங்கு திருப்பதி என அழைக்கப்படும், பள்ளிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில், உயர்ந்த கோபுரமும், இரண்டு தளங்களை ஊடுருவிச் செல்லும் நீண்ட கொடி மரமும் கொண்டது. இங்குள்ள முதல் தளத்தில் த்ரிநேத்ர தசபூஜ ஆஞ்சநேயர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன. படியேறிச் சென்று பெருமாளைத் தரிசிக்கலாம். துலாபாரப் பிரார்த்தனை இங்கு பிரசித்தம். இந்தப் பெருமாளை தரிசிக்க, நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.