அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு விழா நடக்க ஆதாரமாக இருந்து வரும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா இரு நாட்கள் நடந்தன. முதல் நாள் முனியாண்டி, காளியம்மனுக்கு பொங்கல்படி கொடுத்து இரவு கரகம் ஜோடித்து மாவிளக்கு எடுத்தனர். இரண்டாம் நாள் உச்சிக்கால பூஜையுடன் அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றினர். இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் கரகம் பெரியாறு வாய்க்காலில் கரைத்தனர். அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பையா, முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், செல்லப்பாண்டி, நகர் செயலாளர் அழகுராஜா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.