ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் பாவை விழா நடந்தது. இதில் நடந்த திருப்பாவை, திருவெண்பா பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில், பர்வத வர்த்தினி பெண்கள் பள்ளி, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் முதல் 3 இடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசுகளையும் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் வழங்கினார். விழாவில், கோயில் உதவி கோட்ட பொறி யாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன் பங்கேற்றனர்.