பதிவு செய்த நாள்
08
ஜன
2015
11:01
சேலம் : சேலம் கோட்டை பெருமாள் கோவில் உண்டியல் மூலம், 7.15 லட்சம் ரூபாய், 10 கிராம் தங்கம், 75 கிராம் வெள்ளி ஆகியவை, காணிக்கையாக கிடைத்தது. சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் உண்டியல், நேற்று கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு தலைமையில், ஆய்வாளர் மணிமாலா, தக்கார் திருஞானசம்பந்தம், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், தலைமை எழுத்தர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, எண்ணும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.உண்டியல் எண்ணும் பணியில், ஓம் ஸ்ரீமான் நாராயணா சேவா டிரஸ்ட் சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். கடைசியாக, அக்.,15ல் உண்டியல் எண்ணப்பட்ட போது, ஐந்து லட்சத்து, 1,260 ரூபாய் பணமாகவும், 10 கிராம் தங்கம், 56 கிராம் வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்தது. தொடர்ந்து, மார்கழி மாத சிறப்பு பூஜைகள், ஜன.,1ல் நடந்த வைகுண்ட ஏகாதசியின் சொர்க்கவாசல் திறப்பின் போது, பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது.மார்கழி மாதத்தில் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், ஜன.,14ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால், பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக, நேற்று கோவில் வளாகத்தில், உண்டியல் எண்ணப்பட்டதில், இதில், ஏழு லட்சத்து, 15 ஆயிரத்து, 317 ரூபாய் பணமாகவும், 10 கிராம் தங்கம், 75 கிராம் வெள்ளி ஆகியன கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.