குன்னூர்: குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ள குழந்தை ஏசு சிற்றாலய திருவிழா துவங்கியது. குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ள குழந்தை ஏசு ஆலயத்தில், கடந்த 25 ஆண்டுகளாக ஜனவரி இரண்டாவது வாரத்தில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, மாலை,6:30 மணிக்கு நவநாள் திருப்பலி; 16, 17ம் தேதிகளில் சிறப்பு நவநாள் திருப்பலி நடக்கிறது. 18ம் தேதி காலை, 11:00 மணிக்கு நன்றி பெருவிழா திருப்பலி நடக்கிறது. 19ம் தேதி திருப்பலி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.