ராகவேந்திரா பாபாஜி பீடம் சார்பில் உலக நன்மைக்காக மகாயாகம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2015 11:01
கோவை : ராகவேந்திராபாபாஜி பீடம் சார்பில், சின்னமோப்பிரிப்பாளையம், அம்மன் நகரில், உலக நலன் வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. யாகத்தை, 18 சித்தர்கள் பீட நிறுவன தலைவர் தேவன் காந்தி துவக்கி வைத்தார். பதுவம்பள்ளி ஆதீனம் ராமலிங்க சுவாமி தலைமை வகித்தார். ஆயிக்கவுண்டர் இறைவணக்கம் பாட, கண்ணன், சங்கு சுவாமிகள் யாகம் நடத்தினர். பீடத்தின் சித்தர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, உலக மக்கள் அனைவரும் செம்மையான வாழ்வு பெற யாகம் நடத்தினர்.