இலங்கையிலுள்ள நுவரெலியாவில் ஓடும் சீதா வாகா நதிக்கரையில் சீதைக்கு கோயில் உள்ளது. இக்கோயில், தரை மட்டத்திற்கு கீழாக அமைந்துள்ளது சிறப்பு. சீதையை கடத்திச்சென்ற ராவணன், அவளை சிறை வைத்திருந்த அசோகவனம் என்று இவ்விடத்தை குறிப்பிடுகிறார்கள். கோயிலுக்கு பின்புறம் ஓடும் நீரோடை ஓரிடத்தில் மட்டும் பூமிக்கு கீழே மறைந்து, சற்றுதூரம் தள்ளி வெளியேறுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் ஏதேனும் புதிய செயலைத்து வங்கும் போது, ஓடையின் ஒருபுறத்தில் பூக்களை இடுகின்றனர். அவை, மறுபக்கமாக வந்தால் சீதை உத்தரவு கொடுத்துவிட்டதாக கருதி செயல்படுத்தும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.