குழந்தை இயேசு ஆலயத்தில் ஆண்டு பெருவிழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2015 11:01
கடலூர்: குறிஞ்சி நகர், குழந்தை இயேசு கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் அடுத்த எஸ்.புதூர் கிராமத்தில் குறிஞ்சி நகரில் உள்ள அற்புத குழந்தை இயேசு கிறிஸ்தவ ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அதனையொட்டி அன்று மாலை 5:00 மணிக்கு பங்கு தந்தை பாக்கியநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து லாசர் சவரிமுத்து கொடியேற்றி, விழாவைத் துவக்கி வைத்தார். 2ம் நாளான நேற்று மாலை சாமிபிள்ளை நகர் பங்கு தந்தை பெரியநாயக சாமி தலைமையில் நவநாள் தேர் மற்றும் நோயாளிகளுக்கான திருப்பணியும், இன்று கிருஷ்ணங்குப்பம் பங்குதந்தை தலைமையில் நவநாள் தேர் வேலைக்காக திருப்பலி நடக்கிறது. நாளை (13ம் தேதி) மாலை பீட்டர் ராஜேந்திரம் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி, ஆடம்பர தேர் பவனியைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.