நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் சுவாமி கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. மார்கழி மாதம் 28ம் நாள் ஆண்டாள், பெருமாளை மணந்த நாளாக கூடாரவல்லி உற்சவம் நடக்கிறது. அன்று விரதம் இருந்து பெண்கள் ஆண்டாளை வழிபட்டு விரதத்தை முடிப்பர். நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கூடாரவல்லியை முன்னிட்டு சிற ப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. ஆண்டாள், பெருமாள் கல்யாண கோலத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அபிநயா நாட்டிய குழு மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.