லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2015 11:01
திண்டிவனம்: திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவையொட்டி, லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் உள்ள மூலவருக்கும், உற்சவமூர்த்திக்கும் மகா திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சீனிவாச பட்டாச்சாரியார் தலைமையில் ரகு, ஸ்ரீதர் பட்டாச்சாரியர்கள் குழுவினர் ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். பெண் பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் தாம்பூலம் அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.