மயிலம்: செண்டூர் கிராமத்திலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. மாலை 6 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு 7.30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.