ராமனைப் பெற்றவள் கவுசல்யா. தாயின் மீதுள்ள ஈடுபாட்டினால் ராமனுக்கு கோசலராமன் என்றும் ஒரு பெயர் ஏற்பட்டது. வேங்கடேச சுப்ரபாதம் கவுசல்யா (கோசலை) சுப்ரஜா ராமா என்றே தொடங்குவதைக் கேட்கலாம். அதே போல, தேவகி மைந்தனான கண்ணன், தேவகீ நந்தன் என்றும் அழைக்கபடுகிறான். ராமதூதன் அனுமன் தன் அன்னை அஞ்சனை மீது கொண்ட அன்பினால் ஆஞ்சநேயனானான், அஞ்சனை மைந்தன் என்பது இதன் பொருளாகும். இப்படி உலகைக் காக்கும் பரம் பொருளையே பிள்ளைகளைப் பெற இந்த தாயார்களின் மணிவயிறு செய்த புண்ணியம் தான் என்ன!