பக்தர்கள் நடைமேடை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2015 11:01
தாடிக்கொம்பு : திண்டுக்கல்-பழநி தேசிய நெடுஞ்சாலையில் பாயாத்திரை பக்தர்களுக்கான நடைமேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விழாக்களின் போது பழநி கோவிலுக்கு எராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். குறிப்பாக தைப்பூச விழாவின்போது சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியாக பழநிக்கு நடந்து செல்கின்றனர். இதனால் திண்டுக்கல்-பழநி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக ரோட்டின் இடது ஓரத்தில் நடைமேடை அமைக்கும் பணி 2 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. தைப்பூசம் நெருங்கிய நிலையில், இப்பணி இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. பழநி பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நடைமேடை பணி முடிவடையாமல் பக்தர்கள் தார் ரோட்டிலேயே நடந்து செல்கின்றனர். இதனால் அவ்வப்போதுசிறிய விபத்துக்கள் நடக்கின்றன. பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.