ராமனின் பதினாறு வயதில் விசுவாமித்திரர் காட்டிற்கு அழைத்துச்சென்றார். தனது தவத்திற்கு தொந்தரவு செய்தவர்களை அழிக்க உத்தரவிட்டார். குருவின் கட்டளையை ஏற்ற ராமன், தாடகை மற்றும் அவளது மகன் சுபாகுவை அழித்தார். அவர்களைக் அழித்த பாவம் நீங்க சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் வணங்கிய சிவன், நாகர்கோவில் அருகிலுள்ள தெரிசனங்கோப்பில் அருளுகிறார். இவர் ராமனின் பெயரால், ராகவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராமனுக்கு, ராகவன் என்ற பெயரும் உண்டு. தாடகையை அழிக்க ராமர், மூன்று சரங்களை (திரி -மூன்று, சரம் -அம்பு) கோர்த்து எய்ததால் இத்தலம் திரிசரங்கோர்ப்பு என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில், தெரிசனங்கோப்பு என மருவியது.