டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தின் கோவில் பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மாநில முதல்வர் ஹரிஷ்ராவத் தெரிவித்துள்ளார்.கடந்த 2013-ம் ஆண்டு மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் முற்றிலும் சேதமடைந்தது. அதனை சீரமைக்கும் பணியில் இறங்கிய அரசு மூன்றாடுகளில் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தது. இதனையடுத்து பணிகள் முழுவீச்சில்செயல்பட்டு வருகின்றன. இது குறித்து மாநில முதல்வர் ஹரிஷ்ராவத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் கோவில் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.