பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
பவானி: பவானி, தேவபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி, தைபொங்கல் உற்சவ விழா நடந்தது. பவானி, தேவபுரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில், மூலதெய்வமான ஸ்ரீதர்மசாஸ்தாவின் அவதார மூர்த்தியான ஸ்ரீஐயப்பன் உடன் எழுந்தருளி, ஒரே கற்ப கிரகத்தில் இருந்து இரு மூர்த்திகளாக, ஒரே பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். தனி சிறப்பு பெற்ற வகையில், தமிழகத்தில் இக்கோவிலில் மட்டுமே, இரண்டு சுவாமிகளும் ஒன்றாக உள்ளனர். இக்கோவிலில், ஸ்ரீசாஸ்தாவின் பரிவாரங்களான, 56 தெய்வ திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. ஸ்ரீ ஐயப்பனுக்கு பிரதான உற்சவமான மகரஜோதி திருவிழா, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, கோவிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும், சிற ப்பு அபிஷேக, ஆராதனை, கோவில் குருசாமி ஜெயராமன் தலைமையில் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 6 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு மஹா தீபாரானை நடந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7 மணிக்கு, மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஐயப்பன் நகர்வலம் புறப்பட்டனர். இதில், உற்சவ மூர்த்திகளுக்கு முன் ஐயப்பன் புலி வேட்டைக்கு செல்வது, மணிகண்டன் ஜனனத்தை விளக்குவது போன்று செய்யப்பட்ட அனிமேஷன் காட்சிகளால், பக்தர்களை வியப்படைந்தனர். தவிர, கேரள செண்டை மேளங்களுடனும், திருச்சூர் சௌபர்ணிகா கலாலயம் குழுவினர் மூலம் பரசுராமர், பார்வதி, சரஸ்வதி, எமதர்மராஜா போன்ற வேடங்கள் அணிந்து, தையங்களி நடன நிகழ்ச்சிகள் மற்றும் சிங்காரி மேளங்கள் முழங்கி ட, பவானி நகரின் முக்கிய வீதிகள் ஊர்வலம் சென்றனர். 500க்கும் மேற்பட்ட பெ ண்கள், கையில் விளக்கு ஏந்தி சென்றனர். ஏற்பாடுகளை தேவபுரம், ஸ்ரீஐயப்பன் கோவில் குருசாமி மற்றும் ஸ்ரீசாஸ்தா சேவா டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்திருந்தனர். அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணராஜ், தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், ரங்கசாமி, முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரங்கசாமி, தி.மு.க., பேச்சாளர் கண்ணன் மற்றும் அக்னி ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.