பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
புதுச்சேரி: கோமாதா கோவிலில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, இன்று(16ம் தேதி) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை, பசுக்களுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. புதுச்சேரி, கருவடிக்குப்பம் ஓம்சக்தி நகரிலுள்ள கோமாதா கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று, பசுக்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, இன்று (16ம் தேதி) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை, பசுக்களுக்கு காய்கறி, பழங்கள், அகத்திக்கீரை, உள்ளிட்ட உணவுகளை அளித்து, உலக நன்மை வேண்டி, சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோமாதா அருளைப் பெறலாம். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீசாய் சங்கர பக்த சபா, கோ சம்ரக்ஷனா எஜூகேஷனல் சேவா டிரஸ்ட், புதுச்சேரி பிராமண சமூக நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.