பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
ஆர்.கே.பேட்டை: லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், தை மாத பிறப்பை ஒட்டி, இன்று, ஊஞ்சல் சேவை மற்றும் வீதியுலா நடைபெறுகிறது. அம்மையார்குப்பம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், தை மாத பிறப்பை ஒட்டி, இன்று, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலை 10:00 மணிக்கு, உற்சவருக்கு திருமஞ்சனம், அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. மாலை 5:00 மணிக்கு, கோவில் முன் மண்டபத்தில், சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி, சேவை சாதிக்கிறார். இரவு 7:00 மணிக்கு, சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.