பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே செம்மாண்டாம் பாளையம் பகவதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா, ஜன., 26ம் தேதி நடக்க உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும், 23ம் தேதி காலை, 9 மணிக்கு கொடுமுடி சென்று, பகவதியம்மனுக்கு தீர்த்தம் கொண்டு வருதல், 24ம் தேதி காலை, 7 மணிக்கு மேல் திருவிளக்கு வழிபாட மங்கள இசை, விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம் போன்ற பூஜையுடன், யாகசாலை பூஜை துவங்குகிறது. வரும், 25ம் தேதி காலை, 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், மாலை 6 மணிக்கு மேல் முப்பெரும் தேவிக்கு மூன்றாம் கால யாகபூஜை நடக்கிறது. வரும், 26ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, 7 மணிக்கு கடம் புறப்பாடு, காலை, 7.30 மணிக்கு விநாயகர், பகவதியம்மன் கோபுரம் மூலாலய கும்பாபிஷேகம், 9 மணிக்கு மஹா அபிஷேகம், முளைப்பாரி கரைத்தல், பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடக்கிறது. கோவில் கோபுரங்களை, சீனிவாசன் ஸ்தபதி அமைத்துள்ளார். சோளீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் புஷ்பகிரி வாசீகசிவம் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.