மண்ணடி: மண்ணடியில், 25ம் ஆண்டு மண்டல மகரஜோதி விழா, நேற்று நடைபெற்றது. மண்ணடி, நைனியப்பன் தெருவில் உள்ள முத்துகுமார சுவாமி கோவிலில், அய்யப்ப சேவா மண்டலி பஜனை குழு சார்பில், அய்யப்பனுக்கு, 25ம் ஆண்டாக நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உற்சவ அய்யப்பனுக்கு கோ பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின், அய்யப்பனுக்கு மகா அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை தங்ககவச திருவா ஆபரணத்துடன் அய்யப்பன் வீதியுலா, கேரள வாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. வரும் 18ம் தேதி காலை. அய்யப்பனுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெற உள்ளது.