திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகில் உள்ள சித்தமல்லியில் அருள்பாலிக்கிறார் அபிராமி அம்பாள் சமேத குலசேகர சுவாமி. மன்னன் குலசேகர பாண்டியனால் 11-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயில் என்பதால் மன்னனின் பெயராலேயே இக்கோயில் அறியப்படுகிறது. இங்குள்ள தண்டாயுதபாணி கருங்கல்லால் ஆனவர். வலது கரத்தில் தண்டத்தை ஊன்றியபடி தோற்றமளிக்கிறார். அந்த தண்டத்தை விரலால் சுண்டினால் வெண்கல ஓசை எழுவது ஆச்சரியம்.