முன்னோர் வழிபாட்டில் சொல்லப்படும் மந்திரம், முன்னோர் பெயர், கோத்திரம் ஆகியவை பிதுர்லோகத்திலுள்ள சரியான நபர்களைச் சென்றுசேர்ந்து விடும் என்கிறது சாஸ்திரம். மாடு, கன்றுகள் ஒன்றாக இருக்கும் கூட்டத்தில் அந்தந்த கன்று தன்னுடைய தாய்ப் பசுவைச் சரியாக அடையாளம் காண்பது போல பிதுர் வழிபாட்டு பலனும் அந்தந்த நபரைச் சரியாகச் சென்றடையும் என்று மகாபாரதம் ஆசிரியர் வியாசர் கூறியுள்ளார்.