அண்ணன் தம்பி சண்டை பல குடும்பங்களில் இருக்கிறது. இதைப் போக்கி, அவர்களை அன்யோன்யமாக வாழ வைக்கும் பொறுப்பு, அவர்கள் குழந்தைகளாக இருக்கும் காலத்திலேயே பெற்ற தாய்மார்களுக்கு இருக்கிறது. இதற்காக அவர்கள்,யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாததீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா என்ற மந்திரத்தை தினமும் விளக்கேற்றியதும் 9 முறை சொல்ல வேண்டும். இதைச் சொல்ல முடியாதவர்கள்,யாகங்களின் வடிவாய் இருக்கும் விஷ்ணுவே! யாருக்கும் எவ்வித சிரமமும் தராதவனே! மகிமை மிக்க தீர்த்தத்தை தன் திருவடியில் உடையவனே! வணங்கியவரை வெள்ளம் போல் ஓடிவந்து காப்பவனே! அழகியதிருநாமங்களை உடையவனே!எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி விடலாம்.இதனால் குழந்தைப்பருவம் முதலே ஒற்றுமை வளர்ந்து, அண்ணன் தம்பி பிரச்னையே வராது என்கிறாள் தேவர்களின் தாயான அதிதி.