ராகு காலத்தில் வீட்டை விட்டுக்கிளம்ப நேர்ந்தால் என்ன செய்வது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 04:01
அர்த்தகாயம் மகாவீர்யம்சந்திராதித்ய விமர்தனம்சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம்தம் ராகும் ப்ரணமாம்யஹம் என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி விட்டு, துர்க்கையம்மனை மனதில் நினைத்து நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டால் போதும். இதைச் சொல்ல முடியாவிட்டால், மனித முகமும் பாம்பு உடலும் கொண்டவரே! பலம் பொருந்தியவரே! சந்திர சூரியரை கிரகண வேளையில் பிடிப்பவரே! சிம்ஹிகையின் மகனே! ராகு பகவானே! உம்மை வணங்குகிறேன், என்று சொல்லிச் சென்றால் எல்லாம் நலமாக அமையும்.