சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பம் சீரமைக்க ரூ.18 லட்சம் ஒதுக்கீடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2015 01:01
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பம் அமைப்பதற்கு ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில்.
கோயில் வாசலில் பல நூறு ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட தெப்பம் தற்போது சிதிலமடைந்தும், ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பை கிடங்காகவும் உள்ளது. கோயிலுக்கு தினமும் வந்து செல்லும் பக்தர்களுக்கு பாழ்பட்டு கிடக்கும் தெப்பம் மன வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கோவில் வளாகத்தில் புதிய தெப்பம் அமைத்து, தண்ணீர் தேக்குவதற்கு ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூபாய் 18 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.